திங்கட்கிழமை, 11 சனவரி 2010, 03:00.25 AM GMT +05:30 ]
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படாத பட்சத்தில், இன்னும் இருபது வருடங்களில் இலங்கை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடாக மாறிவிடும் என ஜனாதிபதி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் கிடைக்கப்பெற்று 60 வருடங்களின் பின்னர், நாட்டில் ஏற்பட வேண்டி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்த கடைசி சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், இனிவரும் காலங்களில் ஏற்படப்போகும் ஆபத்துகளை யாராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் ஏற்படாமல் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்குமாக இருந்தால், இன்னும் 15 இருபது வருடங்களில் எமது பரம்பரையினர் வாழ்வதற்கான நாடு ஒன்று இல்லாது போகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், இந்து சமுத்திரத்தில் காணப்பட்ட ஒரு காட்டுத் தீவைப் போல இலங்கை மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எதிர் காலத்தில் எமது பிள்ளைகள் ஒருவரை ஒருவர் கொன்று, கொள்ளை அடித்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவ்வாறான ஒரு நிலைக்கு இலங்கையை உட்படுத்திவிட கூடாது எனவும், இதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை நாட்டு மக்கள் அனைவரும் தற்போதைய நிலையிலேயே சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக தெரிவு செய்துவிட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளார் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 - 20 நாட்களில் நாங்கள் பெருமளவிலான சவால்களையும், அச்சுறுத்தலுக்கும் இலக்காக வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.
எமது பொது வேட்பாளர் சரத் போன்சேகாவை வெற்றிபெற செய்ய வேண்டியதே தமது இலக்கு எனவும், எனினும், தற்போதைய நிலையிலேயே மக்கள ஏகமனதாக சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக தெரிவு செய்துவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sunday, January 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment