Wednesday, January 20, 2010
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா (உள்ளம்) பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம்) பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா (உள்ளம்) ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம்) கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா (உள்ளம்) ########################################################
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment