செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 01:29.40 AM GMT +05:30 ]
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரயாணிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய குடிவரவு கருமபீடங்களில் நிலவும் நெருக்கடி காரணமாக புறப்படும் நேரத்திலிருந்து குறைந்தது 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டுமென "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்' அறிவித்துள்ளது.
விமான நிலைய குடிவரவு கருமபீடங்களில் நீண்ட வரிசைகளும் பல மணிநேர தாமதங்களும் இடம்பெறுவதால் பொதுவாக தள நடவடிக்கைகளைக் கையாளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment