திங்கட்கிழமை, 04 சனவரி 2010, 09:01.31 PM GMT +05:30 ] [ பி.பி.சி ]
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், போரில் ஈடுபட்டதாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் மறு வாழ்வு அளிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார்.
திங்களன்று தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தில் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால், தகுந்த ஆதாரமில்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து நபர்களையும் ஒரு மாதகாலத்துக்குள் விடுவிக்கப்போவதாக பொன்சேகா கூறியிருக்கிறார். இலங்கையில் தற்போது அமலில் இருக்கும் அவசர காலப் பிரகடனமும் அதன்கீழான அனைத்து விதிகளும் முடிவுக்கும் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment