Monday, January 4, 2010

சம்பந்தனால் சரத்பொன்சேகாவிடம் கையளிக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைத் திட்டம்!

சரத்பொன்சேகா மற்றும் ரணில் ஆகியோரை இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா.சம்பந்தன் சந்தித்த போது, 10 அம்சத் திட்டத்தினை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றைக் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் முன்னணிக்கு ஆதரவு வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைத் திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என பேசப்பட்டுள்ளது.

10 அம்சக் கோரிக்கைகளில் சில

01. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட வேண்டும்.
02. மீள்குடியேற்றங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
03. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
04. மீன்பிடித் தடை முற்றாகத் தளர்த்தப்பட வேண்டும்.
05. வர்த்தக மற்றும் வியாபாரத் தடைகளை நீக்கப்பட வேண்டும்.
06. இராணுவ முகாங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

போன்ற கோரிக்கைள் உள்ளடக்கிய 10 அம்சத் திட்டம் சரத்பொன்சேகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் எடுத்தே சரத்பொன்சேகா யாழ்பாணம், வவுனியா மற்றும் மன்னாரில் தேர்தல் பரப்புரைகளில் கருத்துக்களை வெளியிட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment