Wednesday, January 20, 2010

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் லக்ஷ்மி எமில்காந்தன் என்பவருடன் நாமல் ராஜபக்ஷ காணப்படும் புகைப்படத்தை வெளியிட்டது எதிரணி



விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரே தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அந்த அமைப்பின் சர்வதேச புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் லக்ஷ்மி எமில்காந்தன் என்பவருடன் இணைந்து ஜனாதிபதியின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ லண்டனில் வைத்து எடுத்துக்கொண்ட படம் எனக்கூறி புகைப்படமொன்றை வெளியிட்டிருக்கும் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக இணைப்பேச்சாளர்கள் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமை வகிக்கும் "இளைஞர்களுக்கான நாளை%27 அமைப்பு பெயர்களில் இருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளிலான முதலீடுகள் பற்றிய விபரங்களை 48 மணிநேரத்திற்குள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறும் ஆளும் தரப்பை வலியுறுத்தியுள்ளனர்.ஜெனரல் பொன்சேகாவின் கொழும்பு பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன. நாமல் ராஜபக்ஷ ஏனைய 3 இளைஞர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றில் அவருக்கு அருகில் நிற்கும் ஒருவரை விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் எமில்காந்தன் என வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் படத்தை வெளியிட்டு இங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் பொன்சேகாவின் இணைப்பேச்சாளர்களில் ஒருவரும் ஜே.வி.பி.பாராளுமன்றகுழுத் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்ததையடுத்து, இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பினர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தனர்.அதுமட்டுமல்லாது சரத் பொன்சேகாவின் பிரசார நடவடிக்கைகளுக்கு புலி முத்திரை குத்த முயற்சிக்கின்றனர்.ஆனால், உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன்தான் விடுதலைத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் லக்ஷ்மி எமில்காந்தனுக்காக பிட்டகோட்டே பகுதியில் வாங்கப்பட்டிருந்த வீடொன்று ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அரச உடமையாக்கப்பட்டுள்ளதென பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருப்பதாக ஜனவரி மாதம் 8 ஆம் திகதி லங்காதீப பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் கருத்தின் பிரகாரம் கே.பி.(குமரன் பத்மநாதன்) யின் கைதின் பின்னர் எமில்காந்தனே விடுதலைப் புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார். இவர் தற்போது எங்கிருக்கிறார் என்பதே எமது கேள்வி. அத்துடன் நாமல் ராஜபக்ஷ தலைமைப் பதவி வகிக்கும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. உயர்தரப் படிப்பை முடித்து சிறுகாலப் பகுதியேயான இளைஞரொருவரின் அமைப்புக்கு எங்கிருந்து இவ்வளவு பாரிய நிதி கிடைக்கிறது என்பதே எமக்குப் பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில்தான் எமில் காந்தனுடன் நாமல் ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட அபூர்வமான புகைப்படம் கிடைத்திருக்கிறது. எனவே, ஜனாதிபதியின் மகன்தான் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் தோள் மேல் கைபோட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் புலித் தலைவர்களின் தேவைகளுக்கேற்பவே அரசாங்கம் பிரசாரங்களை நடத்துகின்றது. அதாவது, இங்கு பலரின் உயிர்த் தியாகங்களுக்கு மத்தியில் போராடி நாட்டை மீட்டெடுத்திருக்கும் நிலையில் ஜனாதிபதியின் மகன் புலித் தலைவர்களின் தோள்களில் கைபோட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, இவர்களின் உதவியில்தான் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு நடத்தப்படுகிறதா என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த அமைப்புக்கு எங்கிருந்து உதவிகள் கிடைக்கின்றன என்பது பற்றியும் நாட்டுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.மங்கள சமரவீரஇதேநேரம், ஜெனரல் பொன்சேகாவின் இன்னுமொரு இணைப் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவருமான மங்கள சமரவீர எம்.பி.இது பற்றி விளக்கமளிக்கையில்;2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு, கிழக்கில் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்வதற்காக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்ட விடயங்கள் பற்றி நாம் ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறோம். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் இந்த எமில்காந்தனை நான் முதலும் இறுதியாகவும் சந்தித்தேன். இதன்போது பசில், ராஜபக்ஷ, லிலித் வீரதுங்க, பி.பி.ஜயசுந்தர ஆகியோரும் சந்தித்தனர். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷதான் தேர்தல் முடியும் வரை எமில்காந்தனுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்தார்.தேர்தலின் பின்னரும் தொடர்புகள் இருந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்த போதும் அதற்கான சாட்சியங்கள் கிடைக்கவில்லை.ஆனால், இன்று நாமல் ராஜபக்ஷ மூலம் அது உறுதியாகியுள்ளது.மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த புகைப்படத்தின் மூலம் நிரூபணமாகிறது.எனவே, தனக்கு எதிராக செயற்படும் தன்னை விமர்சிக்கும் அனைவரையும் சேதத்துரோகியென தூற்றும் சுயரூபம் தற்போது வெளியிடபட்டுள்ளது. கே.பி.கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் வசமிருக்கும் வங்கிக் கணக்குகள், கப்பல்கள் உட்பட புலிகளின் சர்வதேச சொத்துகள் பற்றிய விபரங்களை நாம் பாராளுமன்றத்தில் கேட்டும் இதுவரை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.எவ்வாறிருப்பினும் நாமல் ராஜபக்ஷவின் பெயரிலும் அவரது இளைஞர்களுக்கான அமைப்பின் பெயரிலும் இருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் சுவிஸ் வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் பண முதலீடுகள் என்பன பற்றி முழு விபரங்களையும் 48 மணிநேரத்திற்குள் வெளிப்படுத்துமாறு கேட்கிறோம்.இளைஞர்களுக்கான நாளை அமைப்பானது அலரி மாளிகையின் விலாசத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.நாம் கேட்டிருக்கும் விபரங்களை ஜனாதிபதி இல்லாவிட்டால் பிரதமர் வெளியிட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். அதை விடுத்து பிரயோசனமற்றவர்களின் பதில்களை நாம் பொருட்படுத்த மாட்டோம். நாம் வெளியிட்ட புகைப்படத்திற்கான உண்மைத் தன்மைக்கான முழுப்பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.புலிகளிடமிருந்து பெறப்பட்ட கறுப்புப் பணங்கள் அனைத்தும் நாமல் ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் ஊடாக வெள்ளைப் பணமாக்கப்படுகின்றன என்றார்.

No comments:

Post a Comment