Sunday, January 10, 2010

திரும்பிப் போ திரும்பிப் போ கொழும்பிற்கே திரும்பிப் போ,யாழ்ப்பாணத்தில்; உனக்கு வாக்கு விழாது. யாழில் மகிந்தவுக்கு கடுமையான எதிர்க் கோசங்கள்!!


































































































































































































































ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 10:58.16 PM GMT +05:30 ]
இன்று யாழ் விஜயத்தை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ஸ யாழ் நகர விகாரை தரிசனத்தின் பின் பட்டப்படிப்புகள் உயர் கல்வி நிலையத்திற்கு சென்ற வேளை அங்கு வகுப்புகளில் இருந்த மாணவர்கள் கடுமையான எதிர்க் கோசங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
திரும்பிப் போ திரும்பிப் போ கொழும்பிற்கே திரும்பிப் போ,யாழ்ப்பாணத்தில்; உனக்கு வாக்கு விழாது என்ற கோசங்களை கேட்ட மகிந்த ராஜபக்ஸ நிலைகுலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குழம்பிய நிலையில் காணப்பட்ட மகிந்த, நாகவிகாரை யாழ் நூலகம் உள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்ட பின் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், யாழ் மாவட்ட கல்வி நிலையை உயர்த்துதல் யாழ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவுதல், தேர்தலின் பின் மேல் சபையை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்களையே தமிழில் குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







No comments:

Post a Comment