Thursday, January 7, 2010

ஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை?

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிச்சந்தேக நபர்களில் சுமார் ஆயிரம் பேர் நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று மாலை யாழ். உரும்பிராய் ஊரெழுப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய முதல் கட்டமாக புலி உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் தமிழர்களில் ஆயிரம் பேர் 9 ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்படுவர் என்றார் அவர்.


" நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்."


எதிரி முதன்மை செய்தியாளர் சிறுத்தை

No comments:

Post a Comment