Thursday, January 7, 2010

முல்லைத்தீவில் மக்கள் சொத்துக்களை சுரண்டும் இராணுவம்!!

முல்லைத்தீவில் தளமிட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அங்குள்ள தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடுவதிலும், அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் அப்பகுதிக்கு சென்றுவந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.


அப்பகுதி மக்களின் வீடுகளிலுள்ள பெறுமதியான மரங்கள், கதவுகள், ஜன்னல்கள் என்பவற்றை அப்புறப்படுத்தி மணலாற்றுப்பகுதி ஊடாக சிங்கள பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், சிறிலங்கா இராணுவத்தினரால் மாங்குளத்தில் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மக்களிடம் சூறையாடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களும் விற்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்கள், உந்துருளிகள் என்பன வீதியின் அருகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்ததாகவும், ஒரு உந்துருளியை 500 ரூபாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினரின் வணிக நிலையத்தில் வாங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



" நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்."


எதிரி முதன்மை செய்தியாளர் சிறுத்தை

No comments:

Post a Comment