Tuesday, January 19, 2010
கோத்தபாயவுக்கு திடீர் மாரடைப்பாம்: நாடகம் அம்பலம்
சிறிலங்காவின் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் இலங்கை அரசு ஒரு கட்டுக்கதையை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. இதன் பின்ணணி தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை கோத்தபாய பெரும்தொகையான பணத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார் என கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த நேரத்தில் கோத்தபாய சிங்கப்பூர் சென்றால் அது பெரும் சந்தேகத்தைக் தோற்றுவிக்கும் என்பதால் இவருக்கு மாரடைப்பு என்றும், சிகிச்சைக்காகவே இவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தனக்குச் சொந்தமாக உள்ள பெருந்தொகையான கறுப்புப் பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றி அதனை அங்கு வைப்பில் இட அல்லது முதலீடுசெய்ய இவர் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதாக கொழும்பில் இருந்து அதிர்வுக்கு செய்திகள் கிடைத்துள்ளன.சிங்கப்பூரைப் பொறுத்தவரை இவர் எந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் வெளியாகும் எந்த நாளிதளும் இது குறித்து எச்செய்திகளையும் வெளியிடவில்லை என்பதும் சிங்கப்பூர் தமிழர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment