Tuesday, January 19, 2010

கிளிநொச்சியின் பாரிய நிலப்பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

இயல்புநிலை இன்னும் ஏற்படுத்தப்படாத கிளிநொச்சியில் பாரிய நிலப்பிரதேசம் ஒன்றை படைத்தரப்பினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஏ9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்கள் யாவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலேயே இயங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம், முருகன் ஆலயம் அரசாங்க திணைக்களம் கூட்டுறவு தலைமையகம் உட்பட பல முக்கிய இடங்கள் கிளிநொச்சியின் புதிய அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் வருகின்றன. இந்நிலையில் குறித்த அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இன்மை காரணமாக அரசாங்க பணியாளர்கள் யாவரும் வவுனியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் கிளிநொச்சிக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள 90பாடசாலைகளில் 6பாடசாலைகள் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன அதேநேரம் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment