வியாழக்கிழமை, 14 ஜனவரி 2010 08:13
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்பும் நோக்கம் இல்லை என்றும் அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதென்றால் கூட இலங்கை அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மறைவைத் தொடர்ந்து அன்னாரின் சடலத்தையும் பிரபாகரனின் தாயாரையும் சிவாஜிலிங்கத்திடம் அரசாங்கம் ஒப்படைத்தது.
இந்நிலையில், பிரபாகரனின் தாயையும் மாமியையும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அரசு அனுமதி அளித்திருப்பதாகக் கூறப்படும் செய்திகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"எங்களுக்கு அரசாங்கத்தின் எந்த உதவியும் தேவையில்லை. சாதாரண மக்களைப் போல எங்களுடைய பணச்செலவில் வெளிநாடுகளிலுள்ள அவர்களின் பிள்ளைகளிடம் அனுப்பி வைப்போமே தவிர அரசாங்கத்திடம் உதவி கோர மாட்டோம்.
இந்தியாவுக்குச் செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி எமக்குத் தேவையில்லை" என்றார்.
அதேவேளை,
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளை, ஆறு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றாக மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், கொழும்பிலிருந்து இரண்டு வாகனங்களே சென்றதாகவும் அது குடும்பத்தினரின் தனிப்பட்ட செலவினங்களுக்குள் அடங்குவதாகவும் கூறினார்.
தாங்கள் வேண்டாம் என மறுத்தபோதும், பளை வரை இராணுவ வாகனங்களில் இராணுவத்தினர் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment