Wednesday, January 13, 2010
பிரபாகரனைப் பற்றிய கைகள் "பொல்லாதவன் காலில்" வீழ்தல் தகுமோ....
தமிழர் பிரச்சினை என்பது இன்னும் பல தசாப்தங்களுக்கு தீர்க்கப்படாத ஒரு விடயமாகவே இருக்கப் போகிறது என்று உறுதியாகிறது. இந்தநிலைக்கு வழக்கம் போல சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாது- துணைபோன தமிழர் தரப்புக்கும் இந்தப் பழியில் பங்குண்டு. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு என்பன முக்கியத்துவமற்ற விடயங்களாக மாறியிருக்கின்றன. போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு என்ற விடயம் கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்டது- இதை உறுதிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளே தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைக்கு வழக்கம் போல சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாது- துணைபோன தமிழர் தரப்புக்கும் இந்தப் பழியில் பங்குண்டு. காரணம் நாம் இன்று மிகவும் வருந்தத்தக்க அரசியல் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அரசியல் அபிலாசை என்பது தமிழீழத் தாய்த் திருநாடு என்பதிலே உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இன்று உருவாகியிருக்கும் புலிகளின் சரியான வழி நடத்தலற்ற வெற்றிடம் பலரையும் பலவிதமான கற்பிதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக இலங்கையின் தேர்தல் விடையத்தில் கூட நாம் சரியாக சிந்தித்து செயற்பட முடியாதவர்களாகவுள்ளோம். ஆட்சிமாற்றம் அவசியம் என ஒருசாராரும், மகிந்தாவை விட பொன்சேகா பரவாயில்லை என இன்னொருசாராரும் புலிகளுக்கு பின்னரான அரசியல் சக்தியாக தமிழர்களின் குரலாக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட த.தே கூட்டமைப்பு வியாபரப் பொருளாகவும், இதுதான் ஒருபுறமிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் கூட தங்கள் கருத்துக்களில் மகிந்தாவின் படையதிகாரியாக இருந்து பொன்சேகா இரானுவத் ததை வழிநடத்தியது மட்டும்தான் அவரது பணி மகிந்தவே தமிழர்களை கொன்றொழித்தார் எனவே சரத்தை ஆதரிப்பபதே தமிழர்களுக்கு சரியானது என வலியுறுத்துவதும்.வேதனையானதே. அத்தோடு இன்று புலம்பெயர் சமூகம் உண்மைச்செய்திகளை அறியாது ஊடக வியாபார உலகுக்குள் உலாவாரும் செய்திகளை மட்டும் நம்பி குழப்பம் அடைவதுவும் முகம் தெரியாது செவிவழிச்செய்திகள் இணையச்செய்திகளாக வரும்போது அதற்குள் நடக்கும் பேரங்கள் அறியப்படாது பொதுமையில் பார்க்கப்படுவதுவும், தமிழ் மக்களுக்கு தலைமை புலிகளே என எழுதிய தமிழ் ஊடகங்கள் கூட சிங்களவனின் பேரம் பேசுதலுக்கு பலியாகி மக்களை குழப்புவதுவும் இலக்கியவாதிகள் அரசியல் எழுதுவதை விட்டுவிடுவோம்,ஆனால் அரசியல் அனுபவமுள்ள அரசியல் பாசறையில் வளர்ந்த பத்தி எழுத்தாளர்கள் கூட இவ் விடையத்தில் தெளிவாக எதனையும் குறிப்பிடாது தப்பித்துக்கொள்ளுவதும் வேதனைதான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வாசகத்தை விட்டுவிட்டு தமிழனுக்கு எதிரி யார் என்பதைச் சிந்திப்போம் கதிர்காமருக்கு பின்பு புலிகளை சர்வதேச பயங்கரவாத பட்டியலுக்குள் தள்ளியவர்தான், மங்கள சமரவீரா புலிகளின் இரானுவக்கட்டமைப்பை உடைத்து அவர்களை ஜீ எஸ் பீரிஸ் ஊடாக சர்வதேச சதிவலைக்குள் சிக்க வைத்தவர்தான் ரணில் முஸ்லீங்கள் இலங்கையில் சிறுபான்மை இனமல்லை. பிரபாகரன் தனிநாடு கேட்கலாம் ஏன் நாங்கள் தனிநாடு கேட்கக்கூடாது என முழங்கியவர்தான் ரவூப் ஹக்கீம் இவர்களோடு இன்று ஜேவிபி மறுபுறம் மகிந்த கூட்டணி இதுவும் தமிழ் தேசியத்தை கருவற்க்கதுணிந்த கூட்டணிதான், முப்பதாயிரம் மாவீரர்களின் உயிர்களினாலும் இலட்சக்கணக்கான தமிழரின் குருதியினாலும் தான் எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்பட்டு நிற்கிறது. ஒப்பற்ற விலைகளைக் கொடுத்த எமது உரிமைப் போராட்டத்தை ஒரு சிங்களப் பேரினவாதிகளை ஆட்சியில் ஏற்றுவதற்காக தமிழினம் தன்னைதானே காட்டிக் கொடுக்கப் போகிறதா?எனவே இத் தேர்தல் சார்ந்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் எமது கேள்வியாக இருந்த சூழலில் அதற்கான பரப்புரைகளை கணிசமாக மேற்கொண்டோம் கூட்டமைப்பினரை கண்டித்தோம் விமர்சித்தோம். இதுசார்ந்து பல விமர்சனங்கள் எம்மீது திணிக்கப்பட்டன. தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு தலைமையகத்திலிருந்து தொலைபேசி உரையாடலூடக நாங்கள் கண்டிக்கப்பட்டோம். சிறீகாந்தா, சிவாஜிலிங்கம்,செல்வம் அடைக்கலநாதன், பிரேமச்சந்திரன், மாவைசேனாதிராஜா, சம்பந்தர், கிஸோர்,போன்றோர் எம்மோடும் நாங்கள் அவர்களோடும் விவாதித்தோம். போதாக்குறைக்கு விக்கிரமபாகுகூட ஆனால் இவை எல்லாம் எமது மக்களை பணயம் வைத்து நடத்தப்படும் நாடகங்களாகவே நாம் பார்க்கின்றோம் . எமது கருத்தில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எவரிடமும் எமது கருத்துக்களை திணிக்கவில்லை. த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்காக அன்றும் பரப்புரை செய்த ஊடகம் என்ற உரிமையோடு இந்த தேல்தலிலும் எமதுமக்களுக்கு எம் தேசத்தினதும் மாவீரரினதும் கனவுகளைக்காவிச்செல்வோம்.கடந்த மே மாதத்தில் இருந்து இன்றுவரையான ஏழுமாத காலத்திலான எமது சமூக அசைவியக்கமானது எதிர்மறையானதாகவே அமைந்துள்ளது. முன்நோக்கி நகர வேண்டிய சக்கரத்தைப் பின்நோக்கி நகர்த்தி தொடக்க புள்ளிக்கு மீளக் கொணர்வதையே ஒரு சாதனை போல நாம் கொண்டாடி வருகிறோம். வட்டுக்கோட்டைப் பிரகடனம்', தாயகம் - தேசியம் - தன்னாட்சி, "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்", வலுச் சமநிலை - 'நடைமுறை அரசு' -- என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும். அதுவே 2010-இன் சவால்களை எதிர்கொள்ளும் வாயில்களையும் தமிழர்கள்மீதான ஒடுக்குமுறை கதவினையும் திறக்க வல்லது. அதற்கான திறவுகோல்கள் - வெளிப்படைத்தன்மை, சூழ்ச்சித்திறன், அனைத்துலக இயங்குமுறை பற்றிய புரிதல், கூட்டுவேலைத்திட்டம் என்பவையாகும். இதனை முன்னெடுக்க அறிவும் - தெளிவும் - துணிவும் முக்கியமானவை. இதனையே நாம் அனைவரிடமும் இத் தேர்தல் விடையத்திலும் எதிர்பார்க்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment