முன்னாள் போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மகிந்த விடுத்த அறிவிப்பை அடுத்து, அன்றைய கூட்டத்தில்வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல முன்னாள் போராளிகள் மீண்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், வவுனியா தடுப்புமுகாமில்வைத்து இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் பிடித்து செல்லப்பட்டனர். இவ்வாறு பிடித்துச்செல்லப்பட்டவர்கள் கடந்த பல மாதங்களாக விசாரணைகள் எதுவுமின்றி வன்னியில் இரகசிய வதைமுகாம்களில் வைத்து விசாரிக்கப்பட்டுவந்தனர்.இவர்களில், போரின் இறுதிக்கட்டத்தில் பிடிக்கப்பட்டவர்களில் 745 பேரை விடுவிக்கப்போவதாக அறிவித்த அரசு, வவுனியாவுக்கு அரசதலைவர் மகிந்த தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தபோது, தேர்தல் மேடையில்வைத்து, 745 முன்னாள் போராளிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தது.இதன்பிரகாரம், கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது 745 முன்னாள் போராளிகள் அரசதலைவர் மகிந்தவினால் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மிகவும் உணர்வுபூர்வமான இந்த நாடகத்தை அரங்கேற்றிய மகிந்த தரப்பு, தமிழர் தரப்பிடம் வாக்குவேட்டையை மேற்கொள்ள தனது உச்சக்கட்ட முயற்சியை மேற்கொண்டிருந்து.இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் வவுனியா தடுப்பு முகாமிலேயே தடுத்துவைக்கப்பட்டனர்.ஆனால், தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் நம்பகரமான தகவல்களின்படி, இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, வவுனியா தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 745 முன்னாள் போராளிகளில் பல நூற்றுக்கணக்கானோரை, அடுத்த நாளே அங்கு வந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் மீண்டும் பிடித்துச்சென்றுள்ளார்கள்.அரசதலைவர் மகிந்தவினால் உறுதியளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீண்டும் எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்ட அவர்களது பெற்றோரிடம், தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள் என்று இராணுவதரப்பில் கூறப்பட்டுள்ளதாக அறியவருகிறது._________________எதிரியின் அச்சுறுத்தலின் கோட்டைக்குள் இருந்து அடங்கா தமிழன் ஈழமைந்தன் தமிழீழம்
Wednesday, January 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment