2010 // தமிழீழம்திகதி: 21.01.
தாக்குதல் ஒன்றில் போர்க்கைதியாக விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட சிறீலங்கா கடற்படை கப்டன் அஜித் பொயாகொட எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தனது ஆதரவுகளை பொன்சேகாவுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
1994 ஆம் ஆண்டு கற்பிட்டி கடல் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சகரவர்த்தனா என்ற கட்டளைக்கப்பல் மீது கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகளால் விடுதலை செய்யப்பட்ட சிறீலங்கா கடற்படையை சேர்ந்த கப்டன் பொயாகொட அரச தலைவருக்கான தேர்தலில் தனது ஆதரவுகளை பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளார்.
இன்று கொட்டகேனா பகுதியில் நடைபெற்ற பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார மேடைக்கு சென்ற அவர் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்ட பொயாகொட 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் விடுதலைப்புலிகளின் வடமுனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், கேணல் பானு, கேணல் ஜெயம் ஆகியோர் பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தகது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment