Thursday, January 21, 2010

படையினரால் இறுதிக்கட்ட தாக்குதல்களில் "றெட்அறோ" ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது

திகதி: 21.01.2010 // தமிழீழம்
இறுதிக்கட்ட தாக்குதல்களுக்காக 'சிகப்பு அம்புகள்" (றெட்அறோ) அயுதங்கள் உள்ளிட்ட பெருமளாவன ஆயுதங்களை கோத்தபாய ராஜபக்சவே கொள்வனவு செய்தார் என்று 58 டிவிசன் படைத்தளபதி மேஜர் ஜென்றல் சிவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிறீலங்காப்படையினரின் இறுதிக்கட்ட வெற்றி தனிநபர் வெற்றி அல்ல அது ஒரு கூட்டு முயற்சிகளின் செயற்பாட்டால் கிடைத்த வெற்றி. இறுதிக்கட்டத்தில் சிறீலங்காப் படையினருக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தான் பெருமளவான ஆயுதவெடிபொருட்கள் கிடைத்தன. இதில் 150 மில்லிமீற்றர் ஆட்லறிகள் மற்றும் பல ஆயுதங்களுடன் தாக்குதல் அழிப்பு திறன்மிக்க "சிகப்பு அம்பு" ஆயுதங்கள் என்பனவற்றை கொள்வனவு செய்து சிறீலங்காப்படையினின் பாவனைக்கு விட்டார்.
இதன் மூலமே நாங்கள் வெற்றி பெற்றோம் என்று சிறீலங்காப்படைப்பிரிவின் 58டிவிசன் படைத்தளபதி மேஜர் ஜென்றல் சிவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
"சிகப்பு அம்புகள்" என்ற ஆயுதம் காவலரண்களை தகர்க சிறீலங்காப்படையினரால் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் பச்சை காடுகளை பற்றி எரியவைக்கும் உந்துகணை வகையான இக்கனரக ஆயுதம் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment