திகதி: 21.01.2010 // தமிழீழம்
தமிழகததில் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கியூபிரிவு புலனாய்வுத்துறையினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தமிழக கடற்கரை ஓரங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும்வேளையில் தமிழகத்தில் உள்ள முகாம்களில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை தொடர்வதாக ஆவணங்கள் அற்ற நிலையில் திருச்சி மதுரை போன்ற இடங்களில் பல ஈழத்தமிழ் இளைஞர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் முகாம்களிலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் முயற்சிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கியூபிரிவு புலனாய்வுத்துறையினர் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக தமிழக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன
Thursday, January 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment