Wednesday, January 20, 2010

அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்
(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு கொடுத்து மகிழ்த்தவா
உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறுகடலெனகளிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுடு தோன்றிடும் குறைகள் போலவே மனதில்
வேதனை மிகவுற

(அலைபாயுதே)

பாடல்: அலைபாயுதே கண்ணா
வரிகள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: கானடா

No comments:

Post a Comment