பாடல்: அந்திமழை
படம்:ராஜபார்வை
பாடியவர்கள்:S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமயிலே எத்தனை நாளடி இளமயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளில் சுமையடி இளமயிலே
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுகொடு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்
சிப்பியில் தப்பிய நித்திலமே, ரகசிய ராத்திரி புத்தகமே
Wednesday, January 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment