Sunday, January 10, 2010
வீர மகனைப் பெற்றெடுத்த.... வீரத் தந்தையே...
வீர மகனைப் பெற்றெடுத்த....வீரத் தந்தையே...!வேத வாக்காய் வன்னி மண்ணில்வாழ்ந்த தெய்வமே....!உன் மகனின் பெயரைக் கேட்டாலே....பயந்து ஒடுங்கும் எதிரிப் படைகள்.உன் வயதை மதியாது....சிறைக்குள் சிந்தனை சிதறாமல். சித்திரவதையாலேயே கொன்றுவிட்டு....உலகிற்கு இயற்கை மரணம் எய்தாரென.வதந்திகளை பரவவிடுவது...இலங்கை அரசிற்குக் கைவந்த கலையல்லவா...?உன் பேரன் எங்கள் நேசக்குமரன்எம்மை விட்டுப்போன துயரம் இன்னும் ஆறவில்லை.ஆறாய்ப் பாய்கின்றது கண்ணீர்த் துளிகள்.உன் மரணச் செய்தி கேட்டவுடன்சுனாமி வந்தது போல்...உலகத்தமிழர் செவிகளில்சோககீதங்கள் ஒலிக்கின்றது.சுயநலம் இல்லாமல் வாழ்ந்தாய்சுற்றி இருப்பவர்களை உறவாக்கினாய்.தமிழைத் தாயாய் நினைத்தாய்தங்கத் தலைவரைப் எமக்குப் பரிசாய்த் தந்தாய்.தமிழீழம் மலருமெனதமிழ் நாட்டில் இருக்கும் போதும் சொன்னாய்.அன்று உன் விழியில் பயம் தெரியவில்லை.இன்று உன் வழியில் பயம் தெரியவில்லை.வாயிருந்தும் எம்மால் பேசமுடியவில்லைவிம்மி விம்மி வாய் கூட வலிக்கும் நிலையின்றுகையிருந்தும் எம்மால் எழுதமுடியவில்லைகைதியாக்கி மரணமாக்கும் நிலையின்று.கண்ணிருந்தும் எம்மால் சாட்சி சொல்லமுடியவில்லை.கற்பழிப்பின் அகோரம் எம்மீதும் தாவும் நிலையின்று.உன் இறப்புக்கு யார் காரணம் ஈழத்தின் தந்தையே...!சாட்சி சொல்ல வருவாயா கரிகாலக் கடவுளே....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment