Sunday, January 10, 2010

(11)...தோற்க வந்த படையல்ல.....

தோற்க வந்த படையல்ல புலிப்படை.சோர வந்த படையல்ல தமிழ்ப்படை. சாக வந்த படையல்லோ கூலிப்படை. காட்டிக் கொடுக்க வந்த... படையல்லோ துணைப்படை - எம்மைக் காட்டிக் கொடுக்க வந்த... படையல்லோ துணைப்படை.உலகம் அறியும் உண்மை நிலைகள்.ஊமைகளாய் மாற்றுது சில ஊடகங்கள்.பேருக்குத்தான் வல்லரசு...பேச்சுக்குப் போனால் வாயடைப்பு.தமிழினக் குமுறல்கள்...தரணியில் ஒலிக்கிறது.தாயகத்துக் கடமையை...தயங்காமல் செய் உலகத்தமிழினமே நீதி நியாயம் நெடுந்துரப் பயணம். அநீதி அநியாயம் ஈழத்தில் நிலந்தரம்.பேச்சுக்குப் போனால்...காதும் காதும் பேசுகிறது.பேச்சு முடிந்து வந்தால்...வானில் குண்டு மழை பொழிகிறது.மூச்சு விட நேரமில்லை முத்தமிழே.முகம் பார்த்துப் பேச...முடியவில்லை உலகத்தமிழரே.உன்னால் முடியும் உலகத் தமிழா - எம் உரிமைக்காய் போராட.உண்ணாமல்... உறங்காமல்...உயிரைக் கொடுக்கிறோம்... அரக்கனுக்கு இரையாய் .பாதுகாப்பு வளையம் வரவழைத்து.பகிரங்கமாய் சுட்டுத் தள்ளுது அரசு.பார்க்கும் விழிகள் கடலாய் மாற...கேட்டும் செவிகள் சுமையைத் தாங்க முடியாமல் தவிக்கிறது...வார்த்தையால் வரைய முடியுமா...வன்னி மக்கள் உணர்வை...வானமே எமக்கு உயிர் பிச்சை கொடு வரும் எதிரியை - உன் வார்த்தையால் அடக்கி விடு.தாயை சேயை மட்டும்... இழக்கவில்லைத் தோழா - எம்தமிழினனே அழிகிறது சோதரா தன்மானத் தமிழனே...தமிழுக்காய் குரல் கொடு தமிழா.

No comments:

Post a Comment