Monday, January 4, 2010

13வது திருத்தச் சட்டத்திற்கு மேலும் செல்வாராம் மகிந்த

04 January, 2010 by admin
தேசிய பிரச்சினைக்கு 13வது அரசியலமைப்புத் திருத்திற்கு அப்பால் சென்று தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதை தாம் நன்றாக அறிந்திருப்பதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எனினும், இதுகுறித்து மக்களுக்கு பகிரங்கமாக ஏன் ஜனாதிபதி அறிவிக்காமல் இருக்கின்றார் என்பது குறித்து தமக்கு குழப்பம் இருப்பதாகவும அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெற்ற பின்னர், 13வது அரசியலமைப்புத் திருத்திற்கு அப்பால் சென்று சாதகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பின்நிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் டிலான் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.தேர்தலுக்காக மகிந்த நாய்படாப் பாடேல்லாம் படுகிறார். இந்திய அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை விட மிக மோசமான வாக்குறுதிகளை தற்போதைய இரு பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர்களும் அள்ளிவீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment