தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களை சென்று பார்வையிட்ட கருணா, அவர்களை வலுக் கட்டாயமாக தேர்தலுக்காக களமிறக்கும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.புலிகளின் விளையாட்டுத் துறையில் இருக்கும் சிலரையும், நிர்வாகத் துறையைச் சார்ந்த சிலர் உட்பட மருத்துவப் பிரிவில் உள்ள சில முக்கிய உறுப்பினர்களையும் களமிறக்க கருணா பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இப் பிரச்சாரத்தைத் தொடங்க இவர் ஆரம்பித்தவேளை, இதனை அறிந்த மக்கள் இக் கூட்டங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்ததால் தற்போது இது கைவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.இருப்பினும் தொடர்ந்தும் தமது தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களைக் கொண்டு அரசியல் லாபம் தேடும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தற்போது முடிக்கிவிட்டுள்ளது. இதற்கு கருணாவே முன் நின்று பல ஏற்பாடுகளைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் சிங்களப் பகுதியில் சரி நிகரான செல்வாக்கு இருப்பதால், தமிழர்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வேண்டிய நிலையில் தற்போது இருவரும் இருக்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே.
Wednesday, 13 Jan 2010
Wednesday, January 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment