தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியாரை இந்தியாவில் சென்று வசிப்பதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியொன்றின் போது கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளை மற்றும் மாமியார், ஏரம்பு ஆகியோர் தமது எதிர்காலம் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லையென தெரிவிக்கவில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ, மற்றும் பிரபாகரனின் மைத்துனர் ஆகியோர் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையிலேயே, ஜனாதிபதி தனது அனுமதியை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment