04 January, 2010 by admin
வன்னியில் நடந்த போர் காரணமாக கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டு உள்ள கிளிநொச்சி பாடசாலைகளில் ஐந்து பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த பாடசாலைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ளது எனவும் அங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்தே பாடசாலைகளும் திறக்கப்படுவதாக அவர் கூறினார்.மேற்படி பாடசாலைகளுக்குக் கடமைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிவரை யாழிலிருந்து வன்னிக்குக் கடமைக்குச் செல்லும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Monday, January 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment