04 January, 2010 by admin
ஜனாதிபதித் தேர்தல் குறித்து இவ்வளவு நாட்களும் இழுபறி நிலையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலமை இன்று முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினமும் சரத் பொன்சேகாவுடன் த.தே.கூ இன் தலைவர் இரா.சம்பந்தன் சரத் பொன்சேகாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அப்பேச்சுக்களை அடுத்தே த.தே.கூ தமக்கு ஆதரவு வழங்கச் சம்மதித்துள்ளதாக சரத் பொன்சேகாவின் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் இன்று கூடிய த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் அது முடிவடைந்ததாகவும், அக்கூட்டத்தின் தொடர்ச்சி நாளை இடம்பெறும் எனவும் நா.உ அரியநேந்திரன் கூறியிருந்தார். நாளைய கூட்டம் முடிவடைந்த பின்னர்தான் தமது முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment