திங்கட்கிழமை, 04 சனவரி 2010, 01:45.05 PM GMT +05:30 ] |
![]() |
இன்று மாலை சரத் பொன்சேகாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜெனரலின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடி கலந்தாலோசனையையும் நடத்தியிருந்தது. எனினும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் எதுவும் இன்று எடுக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று முழுவதும் கூட்டமைப்பு, நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடி ஆராய்ந்தபோதும் நாளை முடிவுக்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும், என் ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட்ட 18 பேர் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் கூட்டமைப்பின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆர் சம்பந்தன் இன்று சரத் பொன்சேகாவை சந்தித்தமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. |
Monday, January 4, 2010
த.தே.கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவு: ஜெனரலின் அலுவலகம் அறிவிப்பு - நாளை முடிவு எடுக்கப்படும் என த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment