Wednesday, January 20, 2010

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பாடல்கள்நீயல்லால் தெய்வமில்லைஎனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா(நீயல்லால்)தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்நாயேனை நாளும் நல்லவனாக்கஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்(நீயல்லால்)வாயாரப் பாடி மனமார நினைந்துவணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்தூயா முருகா மாயோன் மருகாஉன்னைத் தொழுதிடலேஇங்கு யான் பெற்ற இன்பம்(நீயல்லால்)பாடல்: நீயல்லால் தெய்வமில்லை குரல்: சீர்காழி கோவிந்தராஜன் ___________________________________________________கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்(கந்தன்)சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்துசிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்(கந்தன்)மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடாமனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடாதினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடாதீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா(கந்தன்)பாடல்: கந்தன் திருநீரணிந்தால் குரல்: டி எம் சௌந்தரராஜன்

No comments:

Post a Comment