ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2010, 03:36.06 PM GMT +05:30 ]
கடுமையான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படாத தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாண பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடம் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளதாக லங்காதீப சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத சந்தேக நபர்களை சட்ட மா அதிபரின் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடுதலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றி வரும் நடவடிக்கைகளுக்கு, பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம், ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ் கன்னியர் மட பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment