ஊர்காவற்றுறையிலிருந்து தம்பாட்டி வரையிலான புதிய பேரூந்து தேவை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பாக கதைப்பதாக கூறி தம்பட்டி கிராம மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின்போது மேலும் கருத்துக்கூறிய டக்ளஸ் தேவானந்தா,
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமக்குள்ளே பிரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதால் யாழ் மக்கள் எமக்கு வாக்களிப்பதில் விருப்பம் காட்டுவார்கள். நடைபெறப் போகும் நாடாளுமன்ற தேர்தலுடன் டக்ளசின் கதை முடிந்துவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் கதைத்துக்கொண்டிருந்தது.
ஆனால் நாம் விவேகமாக செயற்பட்டோம். அதனுடைய விளைவுகளை இப்போது யாழ் தேர்தல் களத்தில் நீங்கள் பார்க்கலாம்.
மகிந்த ராஜபக்ச எதிர்காலத்தை நன்றாக விளங்கிக்கொண்டு அதற்கேற்றவாறு செயற்படக்கூடியவர்.
நாமும் அவருடன் கதைத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். எனவே எமக்கு வாக்களியுங்கள். என டக்ளஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment