Tuesday, March 2, 2010

திருப்பதி உண்டியலில் நேற்று ஒருநாள் வருமானம் 2.5 கோடி ரூபாய்

செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 10:51.23 AM GMT +05:30 ] நேற்று ஹோலி பண்டிகை என்பதால் திருப்பதியில் கூட்டம் அலைமோதியது. உண்டியலில் நேற்று மட்டும் 2.5 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஹோலி பண்டிகை என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தரிசனத்திற்கு 4 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் மூலம் ரூ.2 1/2 கோடி வருமானம் கிடைத்தது. லட்டு கவுண்டர்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊழியர்கள் லட்டு வினியோகத்தை தாமதம் செய்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திடீரென போராட்டத்தில் குதித்தனர். தேவஸ்தான ஊழியர்களை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து பக்தர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment