வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில்
தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே
மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள
அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு
மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல
விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர்
கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்
தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது
ஈடுபட்டுவருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்
அமைப்புக்கள் இந்தியாவுக்குச் சென்று, அங்கு தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ்
அகதிகளின் சாட்சிகளை பெற்றுவருவதாகவும் சந்தேகித்து, இந்தியப்
புலனாய்வுத் துறையினரே இத்தகைய இரகசியக் கடத்தல்களை செய்து வருவதாகவும்
சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச
நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும்
அம்பலமாகும் என்ற அச்சத்திலுயே, அத்தகைய போர்க்குற்றச் சாட்சியங்களை
வழங்கக் கூடிய மக்களை இரகசியமாக இந்திய உளவுத்துறை கடத்தி வருவதாகமேலும்
அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்கள் எதுவும் உறுதியாகத்
தெரிவிக்கப்படாத பட்சத்திலும், இதற்கான சாத்தியங்கள்உள்ளதை
மறுப்பதற்கில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5651-2010-03-04-12-22-09
Thursday, March 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment