Monday, March 1, 2010

முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க கால அவகாசம் கோருகின்றது இராணுவம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவை என இராணுவம் அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு, மார்ச் 02
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவை என இராணுவம் அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலம் மூளைச் சலவை செய் யப்பட்டு இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட உறுப்பினர்களுக்கு உட னடியாக மறுவாழ்வு அளிக்க முடியாது எனவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி கள் இராணுவத்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிரேஸ்ட உறுப்பினர்களை எடுத்த மாத்திரத்தில் இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பி விட முடியாது எனவும், அவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது எனவும், ஆழ் மனதில் பதியப்பட்டுள்ள விடயங்களை அவ்வளவு சுலபமாக மாற்றியமைக்க முடியாது எனவும் மறுவாழ்வுக்கு பொறுப்பான உயரதிகாரி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மனமாற்றத்தை அடைவதற்கு குறித்த உறுப்பினர்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும்
குறுகிய காலப் பகுதியில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போராட்டங்களுக்குத் தாம் பலவந்தமாகத் தள்ளப்பட்டனர் என்றும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கே தாம் விரும்புகின்றனர் எனவும் கைதானவர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து இராணுவத் தரப்பு ஆரா´ந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.
அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காக மாதாந்தம் 8 கோடியே 8 லட்\ம் ரூபா செலவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (அசி)

No comments:

Post a Comment