கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களுக்கான நீதிமன்றங்கள் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. இரு இடங்களிலும் உள்ள நீதிமன்றங் களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ள தால், தற்காலிக ஏற்பாடாக, வவுனியா வில் இவ் இரு நீதிமன்றங்களையும் மூன்று வாரங்கள் இயக்க ஏற்பாடு செய்ய
யாழ்ப்பாணம், மார்ச் 2
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களுக்கான நீதிமன்றங்கள் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளன.
இரு இடங்களிலும் உள்ள நீதிமன்றங் களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ள தால், தற்காலிக ஏற்பாடாக, வவுனியா வில் இவ் இரு நீதிமன்றங்களையும் மூன்று வாரங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
நீதிமன்றச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக வவுனியா நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ் ராஜா தலைமையில் குழு ஒன்று நேற்று கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எஸ்.சிவ குமார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.ரியல் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரும் இக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
சேதமடைந்துள்ள இரு நீதிமன்றக் கட் டடங்களையும் புனரமைப்பது, தளபாட வசதிகளை ஏற்படுத்துவது ஆகிய விட யங்கள் தொடர்பாக இக் குழுவினர் ஆராய்ந் தனர். (அ193)
No comments:
Post a Comment