
இதன் மூலம் இவ்வறிக்கையில் உள்ள விடையங்கள் சில கசிந்துள்ளது. இச் செய்திகள் கொழும்பில் இருந்து கிடைக்கப் பெற்றாலும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. அவ்வறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டு வருகிறது. உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் கே பி சரணடைந்தார் என அதில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது
விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பில் உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் மலேசியப் புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையில் கே பி இலங்கையிடம் சரணடைந்ததாகக் கொழும்பில் இருந்து கிடைக்கும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே பி விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பில் வெளியில் தெரியும் நபராக இருந்த போதிலும் சர்வதேச வலையமைப்பை வேறொருவரே வழிநடத்தி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொட்டு அம்மான் சமாதான உடன்படிக்கைக் காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் குறித்த குறிப்பிட்டுக் கூறக் கூடிய தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கிடையில் சில பிளவுகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொட்டு அம்மான் அந்த அமைப்பின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடவில்லை எனவும் அவர் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment