Sunday, March 7, 2010

சாமியார்களை நான் நம்புவதில்லை! த்ரிஷா அதிரடி!(வீடியோ இணைப்பு)



விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் படத்தின் நாயகன் சிம்பு, நாயகி த்ரிஷா, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில் த்ரிஷாவிடம் சினிமாவைத் தவிர சில கேள்விகள் கேட்கப்பட்டன.

கேள்வி: எந்த சாமியார்களிடமாவது ஆசிர்வாதம் வாங்கியிருக்கீறீர்களா?

பதில்: மனிதனை கடவுளாக நினைக்க மாட்டேன். எந்த சாமியாரிடமும் இதுவரை நான் ஆசிர்வாதம் வாங்கியதில்லை. சாமியார்களை நான் நம்புவதில்லை.

கேள்வி: நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: மீடியா என்பது பவர்ஃபுல் விஷயம். அதைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

No comments:

Post a Comment