Monday, March 8, 2010

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி - ஊடக அறிக்கை

கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை ஊடக அறிக்கை 08-03-2010

த.தே.கூ இனுள் எதேச்சாதிகாரம்

கடந்த 28-02-2010 அன்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கு முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ) வெளியிட்ட பதிலறிக்கை 04-03-2010 அன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சில கருத்துக்களை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முன்வைக்க விரும்புகின்றது.
திரு.இரா சம்பந்தன் திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன் திரு.மாவைசேனாதிராஜா திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திரு.செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் த.தே.கூட்டமைப்பின் தலைமைகளாக ஆரம்பத்திலிருந்து செயற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது. ஆனால் 2009 மே 18 ம் திகதிக்குப் பின்னர் திரு.இரா சம்பந்தன் திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன் திரு.மாவைசேனாதிராஜா ஆகிய மூவரும் த.தே.கூ உருவாக்கப்பட்ட அடிப்படை கொள்கையில் இருந்து அதை விலக்கி எதேச்சாதிகாரமாக தமது எண்ணப்படி சகல முடிவுகளையும் மேற்கொண்டு த.தே.கூ வினை தமிழர் விரோதப் பாதையில் இழுத்துச் சென்றனர் என்பதே உண்மை.

த.வி.புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ தீர்மானமும் அதை வைத்து தமிழர்களை ஏற்மாற்ற முயலும் த.தே.கூட்டமைப்பின் மூத்த தலைமைகளும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமைகளால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தைக் கஜேந்திரக்குமார் ஏற்றுக்கொண்டதாகவும் இதில் உள்ளவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால் அதுவே பெரிய விடயம் என கஜேந்திரக்குமார் தெரிவித்ததாகவும் த.தே.கூ. அறிக்கை குறிப்பிட்டுகின்றது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை (2-3-2010) திருகோணமலை மாவட்டத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சில விடயங்களை தானே ஒப்புக் கொண்டுள்ளார். அது பற்றிய செயதி கடந்த 04-03-2010 அன்றய தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்தது.

· அதாவது 2002 ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் ஒப்புக் கொண்டு உருவாக்கிய ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

· கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் தீர்வுத்திட்டம் அமைய வேண்டும் என வலியுறுத்தினார் என்றும் இந்த இடத்திலேயே கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தெரிந்தோ தெரியாமலோ திரு. சம்பந்தன் அவர்கள் தானாகவே இத்தீர்வுத்திட்டத்தில் அடிப்படை முரன்பாடுகள் இருந்தன என்பதையும் அதனாலேயே திரு.கஜேந்திரக்குமார் கூட்டமைப்புடன் முரன்படவேண்டி வந்தது என்பதையயும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நாம் சில விடயங்களை வெளிப்படுத்த விரும்புகின்றோம். ஒஸ்லோ பிரகடனமானது தமிழ் மக்களின் தேசியம் சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் இறைமை ஆகிய அடிப்படை கொள்கைகளை உள்ளடக்காது தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றாகும். அந்த தீர்மானத்தினை விடுதலைப் புலிகள் ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டனர். அதனை நிராகரித்து அதற்குப் பதிலாக தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் இறைமை ஆகிய அடிப்படைகளை உள்ளடக்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளை முன்வைத்தனர் என்பதே உண்மை.

கடந்த 06-03-2008 அன்று படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவநேசன் அவர்களின் இறுதிக் கிரிகைகளுக்கு சென்றிருந்த கூட்டமைப்பின் மூத்த தலைமைகளில் ஒருவரான திரு.மாவைசேனாதிராஜா அவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பொழுது அவர் ‘ஒஸ்லோ பிரகடனத்தைத் தாங்கள் நிராகரித்துள்ளதாகவும்; அதனை அடிப்படையாகக் கொண்டு எந்த தீர்;வு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்;’ என்றும் உறுதிபடத் தெரிவித்ததாகவும்; அதற்குப் பதிலாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளின் அடிப்படையில் எதிர்கால அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் அந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் திரு.மாவைசேனாதிராஜா அவர்கள் பாராளுமன்றக் குழுவுக்கு தெரிவித்திருந்தார்.
ஒஸ்லோ தீர்மானம் தமிழ் தேசியத்தின் தனித்துவமான இறைமையை விட்டுக் கொடுத்து தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டை 35 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு செல்கின்றது என்ற காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்திருந்தனர். இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தும்; கூட த.தே.கூவின் மூத்த தலைமைகள் மக்களை ஏமாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் ஏற்று உடன்பட்டுக் கொண்டதற்கமையவே (ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலான) இத்தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதாக பொய்யான கருத்தைப் பரப்பி வருகின்றார்கள்.

கூட்டமைப்பின் மூத்த தலைமையான திரு.இரா.சம்பந்தன் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வுத்திட்ட வரைபை தயாரித்துள்ளதாக கூறுவதன் மூலம் அவர்கள் கொள்கையை கைவிட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. இந்நிலையில் 4-03-2010 திகதிய தினக்குரல் உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையானது முன்னுக்குப் பின் முரணாகவும் உண்மைகளை முற்றாக மூடி மறைப்பதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலும் அமைந்துள்ளது.

செல்வம் அடைக்கலநாதனின் திரிசங்குநிலை

த.தே.கூவின் மேற்படி அறிக்கையில் மூத்த தலைமைகள் என்று நாம் குறிப்பிட்ட திருவாளர்கள் சம்பந்தன் மாவை சுரேஸ் ஆகியோர் தவிர தலைமைத்துவத்தில் உள்ள திரு. செல்வம் அடைக்கலநாதனும் உள்ளார் எனவும் இம் மூவர்தான்; தவறான தலைமைகளாயின் த.தே.கூவின் தலைமைத்துவத்தில் உள்ள ஐந்தாவது தலைவரான செல்வம் அடைக்கலநாதன் புதிய முன்னனியினை உருவாக்கும்போது ஏன் அழைக்கப்படவல்லை எனவும் கேட்கப்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுத் தறிகெட்டுச் செல்லும் இந்நிலையில்; கொள்கை அடிப்படையில் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எமது கொள்கை நிலைப்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர்; தனது கட்சியை சார்ந்த அம்பாறை மட்டக்களப்பை சேர்ந்த உறுப்பினர்கள் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும் மேலும் சில காரணங்களுக்காகவும் தற்போது எம்முடன் இணைந்து கொள்ள முடியாதுள்ளதாகவும் பதிலளித்திருந்தார்.

இரகசியமாகத் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம்

தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கும் ஆரம்பக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அதில் தமது சம்மதத்தினையும் தெரிவித்துள்ளதாகவும் த.தே.கூவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 மே 18 ற்குப் பின்னர் முதற் தடவையாக இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர்மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்தியத்தரப்புடன் பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலில் திரு.இரா சம்பந்தன் திரு.மாவைசேனாதிராஜா திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன் திரு.ப.கனகசபை திரு.கஜேந்திரகுமார் ஆகியோர் பஙகுபற்றினர்;. அந்த கலந்துரையாடலில் இரா சம்பந்தன் அவர்கள் தாங்கள் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அந்த தீர்;வுத்திட்டம் பற்றி டில்லிக்கு சென்று கலந்துரையாட விரும்புவதாகவும் அதற்காக தங்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அதிகாரிகளிடம் தாம் முன்வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அச்சந்தற்பத்திலேயே தீர்வுத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் கஜேந்திரகுமாருக்கு த் தெரிய வந்தது.

தீர்வுத்திட்டம் தயாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும் அதில் என்னென்ன விடயங்கள் உள்ளடங்கியுள்ளன எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதுவும் தெரியாதென்றும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியிருந்தார். தீர்வுத்திட்டத்தை சர்வதேச சமூகத்தவர்களுக்கு காண்பிப்பதற்கு முன்னர் கூட்டமைப்பிலுள்ள சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாடி அவர்களது கருத்துக்கள் பெறப்படல் வேண்டும். அத்துடன் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கருத்துக்கள் பெறப்பட்டு அவற்றையும் உள்ளடக்கியதாக வரைபை தயாரித்த பின்னரே சர்வதேச சமூகத்தினருடன் தீர்வுத்திட்டம் பற்றி கலந்துரையாடலுக்கு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எனவே இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பில் தீர்வுத்திட்டம் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டுமென கஜேந்திரகுமார் கோரியிருந்ததார். அதற்கு கூட்டமைப்பின் மூத்த தலைமை சம்மதம் தெரிவித்திருந்தது.

இணக்கத்திற்கு மாறாக செயற்பட்ட த.தே.கூ இன் மூத்த தலைமைகள்.

ஆனால் ஏற்கனவே இணங்கிக் கொண்டதற்கு மாறாக திரு.சம்பந்தன் திரு.மாவைசேனாதிராஜா திரு.சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்திய அதிகாரிகளுடனான சந்திப்பின் பொழுது தாம் தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாகவும் அந்த தீர்வுத்திட்டம் பற்றி டில்லிக்கு வந்து கலந்துரையாட விரும்புவதாகவும் அதற்காக தங்களை டில்லிக்கு அழைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.

கூட்டமைப்பில் உள்ள ஈபிஆர்எல்எவ் தமிழரசுக்கட்சி ஆகிய இரண்டினதும் தலைமைகளைத் தவிர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்புக்களுக்கு தீர்வுத்திட்டம் தொடர்பாக எதுவும் தெரியப்படுத்தப்படவி;ல்லை. உண்மை இவ்வாறு இருக்க தீர்வுத்திட்டம் வரைவது பற்றிய சட்டத்தரணிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆரம்பத்திலேயே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதில் திருமதி.பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியதாகவும் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

அதன் பின்னர் 2009 யூன் மாதம் முதன் முதலாக கஜேந்திரகுமாருக்கு தீர்வுத்திட்டத்தின் ஓர் வரைபு காட்டப்பட்டது. அந்த வரைபு அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக தயாரிக்கப்பட்டிருந்தது. அடிப்படை விடயங்களை கைவிடக் கூடாது என்ற விடயம் கNஐந்திரகுமாரினால் சம்பந்தனுக்கு வலியுறுத்திக் கூறப்பட்டது. ஆலோசனைகளை உள்ளடக்கி தாம் திருத்தங்களை மேற்கொள்ளுவோம் என்று பதிலளிக்கப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் இன்னுமொரு வரைபு கஜேந்திரகுமாருக்கு காண்பிக்கப்பட்டது அந்த வரைபும் அடிப்படை கொள்கைகளுக்கு முரணான வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பொழுதும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு திருத்தங்களை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டபோதுதான் முதன் முதலில் தீர்வுத்திட்ட வரைபு வாசிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டு தமிழில் மொழி பெயர்த்துக் கூறப்பட்டது. ஒருவருடத்திற்கு மேலான காலத்தில் அவர்கள் தயாரித்த வரைபு சில மணிநேரம் தொடர்ச்சியாக வாசித்து முடிக்கப்பட்ட பின்னர் உடனடியாகவே அதன் மீதான ஆலாசனைகள் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்;வுத்திட்ட வரைபு ஒன்றின் பிரதியை தமக்கு வழங்குமாறு வலியுறுத்திய பொழுதிலும் அவ்வாறு தரமுடியாது என்று மறுக்கப்பட்டது. ஆனாலும் வாசிக்கப்பட்டதை செவிமடுத்த அடிப்படையில் அபிப்பிராயங்களை உடனடியாக முன்வைக்குமாறு கூட்டமைப்பின் மூத்த தலைமை வற்புறுத்தியது. எனினும் தமக்கு காலம் தேவை என உறுப்பினர்கள் வற்புறுத்தியமையினால் மூன்று நாள் அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டது.

திரு.இரா.சம்பந்தனின் பிடிவாதம்

இறுதியாக கடந்த டிசம்பர் 09 ம் திகதி தீர்வுத்திட்டத்தினை இறுதி செய்வதற்கென சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலுக்காக கட்சித் தலைவர்களுக்கு மட்டும் சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தார். அந்தக் கலந்துரையாடலுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஐh கNஐந்திரனையும்; அழைத்துச் சென்றிருந்தார். அந்த கலந்துரையாடலில் திரு.இரா சம்பந்தன் திரு.மாவைசேனாதிராஜா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திரு.செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தீர்வுத்திட்டத்தினை இறுதிப்படுத்தும் அந்தக் கலந்துரையாடலில் தீர்வுத்திட்டம் வாசித்து விவாதிக்கப்பட்டது.

அந்த வரைபானது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் இறைமை ஆகிய அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணாக தயாரிக்கப்பட்டிருந்தது. அடிப்படை கோட்பாடுகள் கைவிடப்பட்டுள்ளமை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றை கைவிட முடியாது அவற்றின் அடிப்படையிலேயே தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும் என மீளவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திரு.இரா சம்பந்தன் அவர்கள் ‘மேற்படி கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுத்திட்டத்தினை தயாரிக்க முடியாது; அவை நடைமுறைச் சாத்தியமற்றவை. இதை இந்தியா விரும்பாது.; இந்தியா விரும்பும் விடயங்களையே நாம் தீர்வாக முன்வைக்க வேண்டும். இந்தியாவிரும்பாத வியடத்தினை தான் ஒருபோதும் செய்யப்போவதில்லை’ என்று வலியுறுத்தினார். தொடர்ந்தும் கொள்கை விடயத்தினை வலியுறுத்த முற்பட்ட பொழுது ‘நீஙகள் கோசங்கள் போட வேண்டாம் என்றும் தான் தயாரித்துள்ள தீர்வுத்திட்டமே இறுதியானது’ என்றும்; தான் அதனை முடிவு செய்துள்ளதாகவும்; அதனையே தான் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஆணித்தரமாக கூறியிருந்தார். நாம் ஒத்துழைப்புத் தராவிட்டாலும் எஞ்சியவர்களது ஆதரவுடன் தான் அந்த தீர்;வுத்திட்டத்தினை முன்வைத்தே தீருவேன் என்றும் உறுதிபடக் கூறிவிட்டார்.

இவ்வாறு கூறப்பட்ட பின்னரும் கூட ஒற்றுமையை காப்பாற்றுவதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். இந்த முயற்சிகளின் இறுதிக் கட்டமாக இந்தப் பாராளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை தொடர்பான முடிவு எடுப்பதற்காக மாசி 16 – 19 ம் திகதி வரை நான்கு நாட்கள் நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றது. இந் நீண்ட கலந்துரையாடலின் பின்னரும் அடிப்படைக் கொள்கைகளை உள்வாங்குவதற்கு த.தே.கூ வின் தலைமை தயாராக இல்லை.

மக்களின் பங்களிப்புடனேயே தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்

மேலும் த.தே.கூ ன் அறிக்கையில் கஜேந்திரகுமாருக்கு மாற்றுச் சிந்தனை இருந்திருந்தா

ல் வேறு தீர்வுத்திட்டத்தினை முன்வைத்து விவாதித்து இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இனத்தின் அரசியல் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப் போகும் தீர்வுத்திட்டத்தினை ஓரிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓரிரண்டு சட்டத்தரணிகளும் தயாரித்து முன்வைக்கும் செயற்பாடாக மேற்கொள்வது அபத்தமானது. தீர்வுத்திட்டம் தயாரிக்கும் வேலைத்திட்டம் மேற்கூறப்படும் கொள்கை அடிப்படைகளில் இருந்து வழுவாது தமிழ்த்தேசியத்தின் பொது அமைப்புக்கள் புத்திஐPவிகள் சட்டவல்லுனர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் விரிவான ஆழமான கலந்துரையடல்கள் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்களது பங்களிப்புக்களுடனும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினையும் அரவணைத்துச் செல்லும் வகையிலும் தமிழ் மக்களின் ஆழமான அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலுமே இம்முயற்சி மேற்கொள்ளப்படல் வேண்டும். அதனையே கூட்டமைப்பின் தலைமையிடமும் வலியுறுத்தியிருந்தோம். எதிர்காலத்தில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இவ்வாறே செயற்படும்.

த.தே.ம.மு இன் உறுப்பினர்கள் மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறு

த.தே.கூ வின் அறிக்கையில் கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வருடக்கணக்கில் வெளிநாடுகளில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டுபேரும் கடந்த 2006 - 2008 ம் ஆண்டு வரை அதிக காலம் வன்னியில் மக்களுடன் தங்கியிருந்தனர். 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் த.தே.கூ ன் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்களாகிய திருமதிp. பத்மினி சிதம்பரநாதன் செ.கஜேந்திரன் nஐயானந்தமூர்த்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து யுத்தத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இணைந்து ஈடுபடவேண்டியிருந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். கொள்கையில் உறுதியானவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன.
இதேவேளை தமிழ் இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் தீர்வுத்திட்டத்தினை உருவாக்கும் விடயத்தில் சிலர் நாட்டில் இருக்கவில்லை என்பதனை காரணம் காட்டி அடிப்படை கொள்கைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிப்பதனை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்.

தமிழர் இறைமைக் கோரிக்கையைத் திரிபுபடுத்த முயலும் கூட்டமைப்பு தலைமை

த.தே.கூ ன் அறிக்கையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னிணி ஸ்ரீலங்காவின் இறைமையை நிராகரிப்பதாக கூறியுள்ளதாக திரிபுபடுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னிணி 28-02-2010 அன்று வெளியிட்ட அதன் முதலாவது ஊடக அறிக்கையில் தமிழர்களின் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை தனித்துவமான தேசம் இறைமை என்பவற்றிற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தியிருந்தது. மாறாக ஸ்ரீலங்காவின் இறைமை பற்றி எந்தவொரு விடயத்தினையும் நாம் குறிப்பிட்டிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய சக்திகளை காட்டிக் கொடுக்க முயலும் த.தே.கூ தலைமைகள்

தமிழ் மக்களின் அடிப்படை கொள்கைகளை வலியுறுத்த முயலும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னிணியினரை 6ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களாகவும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை முன்வைப்பவர்களாகவும் காட்டி சிங்கள மக்களையும் அரசையும் ஆத்திரமடையச் செய்து சட்டச் சிக்கலில் மாட்டவைக்கும் உள் நோக்கிலேயே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

நீதியான சாத்தியமான தீர்வுப்பாதையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியானது இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தம் அங்கீகரிக்கப்படுவதனூடாகவே ஒரு நாட்டுக்குள் நாம் நீதியான ஒரு தீர்வை பெறமுடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

த.தே.கூ வின் அறிக்கையில் தமிழரது அடிப்படைக் கொள்கைகளை வெற்றுக் கோசங்கள் எனவும் தத்துவங்கள் எனவும் கேலி செய்துள்ளமை கவலைக்குரிய கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இக் கொள்கைகள் தமிழ் மக்களை பொறுத்தவரையில் 150000 திற்கும் அதிகமான மக்கள் தமது உயிர்களை தியாகம் செய்யுமளவுக்கு மிகவும் உன்னதமான உயரிய கொள்கைகளாகவே உள்ளன. இக் கொள்கைகள் தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளாகும். இக் கொள்கைகளை வெற்றுக் கோசங்கள் என கேலி செய்வதன் மூலம் தமிழரசுக் கட்சியின் வாரிசுகள் என்று தம்மை கூறிக் கொண்டு வீட்டுச் சிக்கத்தில் போட்டியிடும் இவர்கள் தமது கடந்தகாலத் தலைமையையே கேலிக்குள்ளாக்குகின்றனர்.

த.தே.கூ வின் அறிக்கையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கூறுகின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை நடைமுறைச் சாத்தியமற்றது என்கின்றனர். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள அதிகாரப் பகிர்வு ஊடான சமஸ்டி என்ற தீர்வுத்திட்டத்தினை சிங்கள தேசம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படியாயின் அவர்கள் முன்வைக்கவிருக்கின்ற தீர்;வுத்திட்டம் எப்படி நடை முறைச் சாத்தியமானதாகும்?

இந்தியாவின் நிர்ப்பந்தத்தினாலேயே 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களின் விரும்பமின்றி 13ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அச்சட்டம் அன்றய தினத்தில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலேயே நிராகரிக்கப்பட்டுள்ள 13 ம் திருத்தச் சட்டத்தினை 20 வருடங்களின் பின்னர் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்துவது பற்றியே இன்னமும் சிங்கள அரசு பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனைச் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என த.தே.கூ வின் தலைiமையும் ஒப்புக்கொண்டுள்ளது.

13 ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் த.தே.கூவின் தலைமையினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்pனை சிங்கள அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அறிக்கையிலேயே கூறுகின்றது.

இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில் த.தே.கூ முன்வைக்க விரும்புவது சிங்கள அரசு தர விரும்புகிற ஒரு தீர்வுத்திட்டத்தையா? சிங்கள அரசுக்கு ‘நடைமுறைச் சாத்தியமான’ தீர்வுத்திட்;த்தைத்தான் த.தே.கூ தலைமை முன்வைக்கப்போகின்றதெனின் 13வது திருத்தச்சட்டத்திற்குக் குறைவானதொரு தீர்வைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை முன்வைக்க வேண்டிவரும். ‘நடைமுறைச்சாத்தியம்’ என்ற பெயரில் த.தே.கூ இன் தலைமை அதனைத்தான் செய்யப்போகின்றதா? இப்படிப்பட்ட ‘நடைமுறைச் சாத்தியமான’ அரைகுறைத் தீர்வைப் பெறுவதற்கு ஒரு தமிழ்த் தலைமை தேவையேயில்லை.
சர்வதேச சக்திகளது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தாம் தயாரித்துள்ள அந்த தீர்;வுத்திட்டத்தினை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் கூறும் காரணம்: சர்வதேசம் விரும்பும் தீர்வை தாம் முன்வைத்தால் அந்தத் தீர்வை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுக்கும் போது இனப்பிரச்சினை தீர்வுக்காக சர்வதேச சமூகம் வேறு வழிகளை கையாள வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதேயாகும். இவர்களது கூற்றுப்படி சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்படவுள்ளது என்பது போன்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச அரசியலை சரியாகக் கையாளல்

உண்மையில் சர்வதேச நாடுகள் பிறிதொரு மக்கள் கூட்டத்தின் மீது அக்கறை கொண்டோ அல்லது அனுதாபத்தின் அடிப்படையிலோ முடிவெடுப்பதில்லை. மாறாக தமது நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவெடுக்கின்றன. இவ்விடயம் சர்வதேச அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்ததே. இவ்விடயம் த.தே.கூ ன் மூத்த தலைமைகளுக்கும் நன்றாகத் தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை பெற உதவுதே சர்வதேச சக்திகளின் நோக்கமென கதைவிடுவவது தமிழ் மக்களை ஏமாற்றும் ஓர் முயற்சியாகும்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை சர்வதேச சமூகத்திற்கு அதிகரித்து வருகின்றது. அதற்கு காரணம் ஸ்ரீலங்காவின் வெளிவிவகாரச் செயற்பாடுகள் சில வல்லரசு சக்திகளின் நலன்களுக்கு விரோதமான போக்கை கொண்டுளமையாகும்.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது. இதன் காரணமாகவே தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தமது அடிப்டை கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமது நலன்களை முன்வைத்து இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது பிரச்சினையை கையில் எடுக்கும் பொழுது தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும்.

நிலமை இவ்வாறு இருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கொள்கையை கைவிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதன் மூலம் தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்த்து சர்வதேச நாடுகள் தங்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கும் கைங்கரியத்தினை மேற்கொள்கின்றது.

விழிப்படைவோம்

தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்க்க ஆயத்தமாகும் தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் மூத்த தலைமைகளான திரு.இரா.சம்பந்தன் திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன் திரு.மாவைசேனாதிராஜா ஆகியோரின் செயற்பாடுகள் தமிழ் தேசத்தை பாரிய அரசியல் பின்னடைவுக்குள் தள்ளிவிடும் என்பதே உண்மையாகும். இந்த உண்மையை நாம் நேசிக்கும் எமது மக்களுக்கு இச்சர்ந்தப்பத்தில் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையும் பொறுப்பாகும்.
நன்றி.

சி.வரதராஐன்
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
08-03-2010

No comments:

Post a Comment