Monday, March 8, 2010

யாழில் இந்திய தூதரக உப அலுவலகம் அமைக்க இலங்கை அனுமதி

இந்தியத் தூதரகத்தின் உப அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பிரேரணை குறித்து இந்தியா விடுத்த வேன்டுகோளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்தியத் தூதரகத்தின் கிளை அலுவலகம் மத்திய மாகாணம், கண்டியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் அலுவலகம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்காது என இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம அண்மையில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை, இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இது குறித்து ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும், அவரும் அப்பிரேரணைக்கு எந்தவித ஆட்'சேபனையையும் தெரிவிக்கவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment