Monday, March 8, 2010

பிரபாகரனின் தாயார் வெளிநாடு பயணம்

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நேற்று வெளிநாடொன்றுக்குப பயணமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனாகொடை இராணுவ முகாமில் அவரது கணவனுடன் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கணவர் வேலுப்பிள்ளை மரணமானதை அடுத்து அவர் இறுதிக்கிரியைகளுக்காக வல்வெட்டித்துறைக்கு வந்திருந்தார். சுகவீனமுற்றிருந்த பார்வதி அம்மையார் சிறிது காலம் அங்கு தங்கியிருந்தார்.

யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

சிவாஜிலிங்கம் செய்த பயண ஒழுங்குகளை அடுத்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டுச் சென்றார் என அறிவிக்கப்பட்டள்ளது.

பார்வதி அம்மையாரின் பிள்ளைகள் இந்தியாஇ டென்மார்க் மற்றும் கனடாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(எம்.ரி.-977)

No comments:

Post a Comment