Thursday, March 18, 2010

இலங்கையில் தற்போது சிறந்த தலைவர் எவருமில்லை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

இலங்கையில் தற்போது சிறந்த தலைவர் எனக் குறிப்பிடக் கூடிய எவருமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் சகோதரரும், சிரேஸ்ட அரசியல்வாதியுமான அனுர பண்டாரநாயக்கவின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள் கூடுதல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள எத்தனிப்பதே தற்போதைய அரசாங்கங்களின் பிரதான குறைபாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு தொடர்பான தெளிவு அரசியல் தலைவர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகத்துறையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நியமிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திறமைசாலிகளை உருவாக்கக் கூடிய நிறுவனமொன்றை விரைவில் நிறுவவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment