இந்திய தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் ஒரு லட்சம் பேர் வரை அகதிகளாக அடைக்கலம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இவர்களில் பலர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.
எனினும் இந்த விடயத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சட்ட மற்றும் சமூக பிரச்சினைகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் பல கருத்து வெளியிட்டு வருகின்றன.
இதேவேளை தமிழகத்தில் தங்கியுள்ள ஒரு லட்சம் அகதிகளின் சுமார் 30 ஆயிரம் பேர் நாடற்றவர்களாக கருதப்படுகின்றன.
பலர் பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் அவசிய ஆவணங்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவை யாவும் உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது அவசியம் என அகதிகளுக்கு உதவி வரும் கிறிஸ்டியன் எய்ட் என்ற நிறுவனம் கோரியுள்ளது.
No comments:
Post a Comment