Thursday, March 18, 2010

பச்சிலைப்பள்ளியில் பொதுமக்களின் நிலங்களில் படையினர் ஆக்கிரமிப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தமது உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தவிர தமது வீடுகளின் கதவு ஜன்னல் உட்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள 14 கிராமசேவையாளர் பிரிவுகளில் பச்சிலைப்பள்ளி பிரிவில் மாத்திரமே மக்களை மீள்குடியேற படைத்தரப்பு அனுமதித்துள்ளது.
அதிலும் அங்கு வசித்து வந்தவர்களில் அரைவாசிப்பங்கினரே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இயக்கச்சி, கோயில்வாயல், மாசல், முக்காவில், சேரன்பற்று, தர்மக்கேணி, அள்ளிபழை, பச்சிலைப்பள்ளியின் கிழக்கில் அமைந்துள்ள தம்பகாமம், கச்சால்வெளி, அரசர்கேணி, வேம்படுகேணி, இத்தாலை, கிளிநொச்சி மேற்கின் முகமாலை, கிளாலி ஆகிய இடங்கள் இதில் அடங்குகின்றன.

No comments:

Post a Comment