பிரான்சு பிரதேசசபைத் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு 21.03.2010 ஞாயிறு நடைபெறவுள்ளது இத்தேர்தலில் சோசலிசக் கட்சியுடன் (Parti Socialist) பச்சைக் கட்சி (Europe Ecologiste) இடதுசாரி முன்னனி கட்சி (Force de Gauche) கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
பிரான்சு பிரதேச சபைத் தேர்தலில் சென் செந்தெனித் (93Seine Saint Denis) தொகுதியில் போட்டியிட தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு செயலாளரும், சர்வதேசப் பேச்சாளருமான கிருசாந்தி சக்திதாசன் (சாளினி) தெரிவாகியுள்ளார்.
பிரான்சு பிரதேசச சபைத்தேர்தலில் ஈல் து பிரான்சு (Ile de France) பிரதேசத்தில் செந் செந்தனித் (93Seine Saint Denis)தொகுதியில் பச்சைக்கட்சி சார்பில் முதலாம்சுற்றில் போட்டியிட்ட கிருசாந்தி சக்திதாசன் (சாளினி) இரண்டாம் சுற்றில் சோசலிச கட்சி, பச்சைக்கட்சி, இடதுசாரி முன்னனி இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் போட்டியிட தெரிவாகியுள்ளார்.
பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் யுஎம்பி கட்சி 27.76 விழுக்காடு வாக்குகளையும் சோசலிசக் கட்சி 25.26 விழுக்காடு வாக்குகளையும் பச்சைக்கட்சி 12.18 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளது இதில் பச்சைக் கட்சி தன்னை மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈல் து பிரான்சு பகுதியில் 16.58 விழுக்காடு வாக்குகளை பச்சைக்கட்சி பெற்றுள்ளது. குறிப்பிடத் தக்கது.
இரண்டாம் சுற்றில் ஈல் து பிரான்சுப் பகுதியில் ஜோன் போல் குசோன் (Jean Paul Huchon) சோசலிச கட்சி(PS) தலைமையில் சிசில் டுவ்லோ (Cécile Duflot) தலைமையிலான பச்சைக் கட்சியும் (Europe Ecologiste) பியேர் லோறன்; (Pierre Laurent) தலைமையிலான இடதுசாரி முன்னனிக் கட்சியும் (Front de Gauche) இணைந்து HUCHON 2010 - LA GAUCHE ET LES ECOLOGISTES RASSEMBLES POUR L'ILE-DE-FRANCE (LUG) என்ற பெயரில் கூட்டமைப்பாக போட்டியிடுகின்றனர்.
இப்பட்டியலில் ஈழத்தமிழராகிய கிரிசாந்தி சக்திதாசன் (சாளினி) தமிழீழ மக்கள் பேரவை செயலாளர்) போட்டியிடுகின்றார். பிரான்சு அரசியல் களத்தில் இரண்டாவது படியில் ஈழத்தமிழர் காலடிவைக்கின்றனர் முதலாவது படியான மாநகரசபைத் தேர்தலில் காலடி பதித்து 10 ஈழத்தமிழர் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தோம் இரண்டாவது படியான பிரதேசசபைத் தேர்தலிலும் தமிழர் ஒருவரைத் தெரிவு செய்வதின்மூலம் கால்களை ஊண்டிக்கொள்ள சோசலிச கட்சி தலைமையில் போட்டியிடும் கூட்டணிக்கு ஆதரவைத் தெரிவிப்போம்.
எதிர்வரும் ஞாயிறு 21.03.2010 நடைபெறும் பிரதேசசபை இரண்டாவது சுற்றுத் தேர்தலில் தமிழாகள் அனைவரும் சென்று வாக்களிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு இத்தேர்தலில் முதலாம் சுற்றில் 53.6 விழுக்காடு பிரஞ்சு மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை தங்களுக்கு தெரிந்த நன்பர்களையும் தங்களுடன் வேலை செய்பவர்களையும், அயலவர்களையும் இரண்டாம் சுற்றில் சென்று வாக்களிக்க கேட்பதின் மூலம் எமக்கான ஆதரவை வளர்துக்கொள்வோம்.
தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு
No comments:
Post a Comment