தமிழரசுக்கட்சியின் திருக்கோணமலை கிளைத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் வேட்பாளர்களான இரா.சம்பந்தன், க.செல்வராசா (சுப்ரா) சீ.மதியழகன், க.திருச்செல்வம், க.நாகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இரா.சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில்,
இறைமை நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உரியது. இதனடிப்படையில் சரித்திர ரீதியாக நாம் வாழ்ந்த இடங்களில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் எமக்குத் தேவை.
உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு இடமுண்டு. வெளியக சுயநிர்ணய உரிமைக்கு 3 காரணங்கள் தேவை.
ஓன்று மக்கள் காலணித்துவ ஆட்சியின் கீழ் இருத்தல்,
இரண்டாவது, மக்கள் அந்நிய ஆட்சியில் இராணுவ அடக்குமுறையின் கீழ் இருத்தல்,
மூன்றாவது உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரசியல் ஆதிக்கம் பெறாது தொடர்ச்சியான இறைமைக்கு வெளியக சுயநிர்ணய உரிமை பெற்றுக் கொள்ளப்படும்.
அதிகார பகிர்வின் மூலம் தீர்வு காண நாம் விரும்புகின்றோம். மனித உரிமைகள் விடயத்தில் அரசு பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுமுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
மக்கள் வாழ்வதற்கு தடையாக இந்தியா அனல் மின் நிலையம் அமைக்க முடியாது. இது விடயமாக இந்தியாவுடன் நாம் பேசியுள்ளோம். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
புலம் பெயர் நாடுகளில் உள்ளோரில் சிலர் கடுமையான போக்கில் இருக்கின்றார்கள். இது விடயமாக அரசியல் நடத்த முடியாது. மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். கோசங்கள கிளப்புவதால் எவ்வித பிரயோசனங்களும் இல்லை. ஆவர்கள் நல்ல வழிக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
தலைமையுரை ஆற்றிய க. துரைரெட்ணசிங்கம் உரையாற்றுகையில்,
மக்களது பிரச்சனைகள், பிரதேசங்கள் பற்றி தெரியாத ஒருவரால் பாராளுமன்ற உறுப்பினராக வர முடியாது. வீதிகளில் மக்கள் கௌரவமாக நடந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவ் வீதி எமக்கு ஏன். மக்களுடைய பாதுகாப்பு கௌரவம் மதிக்கப்பட வேண்டும்.
முரண்பாடுகள் நல்ல முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ளோர்கள் இணையத் தளங்கள் ஊடாக முட்டி மோதிக் கொண்டு இருக்கின்றார்கள். இணைய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
போராட்டங்களை நடத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். வெளிநாடுகளில் எமக்காக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அங்கும் அதிப்தியாளர்கள் இருக்கின்றார்கள்.
விடுதலைப்புலிகள் மீது அதிருப்தி கொண்டவர்கள் அதனைச் சாட்டாக வைத்துக் கொண்டு தமிழ் மக்கள மீது அதனைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களால் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கி வருகின்றது. என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment