சென்னை செல்லும் ஈழத் தமிழர்கள் விவரங்கள் சேகரிப்பு: ரிப்போ
சென்னைக்கு விமானம் மூலம் செல்லும் ஈழத் தமிழர்களின் விபரங்களை கியு பிரிவுப் பொலிசாரால் ரகசியமாகச் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை விமானநிலையத்தில் இந்தியாவில் அவர்கள் எங்கு தங்கப் போகிறார்கள் என்ற படிவத்தை நிரப்பிக்கொடுக்கவேண்டும், அப்படிவத்தை வைத்து அவர்கள் செல்லவிருக்கும் உறவினர்களின் வீடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், பின்னர் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழ் நாட்டில் அப்படி தங்கியிருக்கும் அகதிகள், மே மாதத்திற்கு பின்னர் இந்தியா வந்திருந்தால் அவர்கள் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிலர் காணாமலும் போயுள்ளனர். எனவே எமது உறவுகள் இந்தியா செல்லும்போது விடுதி ஒன்றை எடுத்து அந்த விலாசத்தை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்.
வன்னிப்போர் முடிந்தபின்னர், வவுனியா தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்றுள்ளவர்களின் விவரங்களை தமிழ்நாடு போலீஸும், புலனாய்வுத் துறையினரும் சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்ததை ஏற்கனவே அதிர்வு இணையம் வெளியிட்டிருந்தது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் உள்ள தடுப்புமுகாம் ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சில மூத்த உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் சென்னைக்கு கூட்டிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உதவியுடன் சென்னையில் ஒரு ஆப்பரேஷனை நடத்த இந்திய மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையினர் பாரிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் இன்னும் கசியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment