இதன் போது வன்னிப் போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினர்.
அத்துடன் திருகோணமலை, சம்பூர் அனல் மின்சார திட்டம் காரணமாக அங்கு பூர்வீகமாக வசித்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்துள்ளமையையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை பொதுத்தேர்தல் முடிவடைந்ததும், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா முனைப்புடன் செயற்படவேண்டும் எனவும் கூட்டமைப்பினர் நிருபமா ராவிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறியதாவது,
தேசிய பிரச்சினை தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய அரசுடனும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளோம்.
இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக பேச்சு நடத்தினோம்.
மேலும் தேசியப் பிரச்சினை தீர்வு தொடர்பில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் எமது யோசனைகளை பெற இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு செயலர் எம்மிடம் தெரிவித்தார்.
அத்துடன் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் என்ன விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் தமக்கு கடிதம் மூலம் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அகதி முகாம்களில் எஞ்சியுள்ள மக்களின் நிலைமை போன்ற விடயங்கள் குறித்தும் பேச்சு நடத்தினோம்.
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் சுயமாக தொழில்களை செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படவேண்டும் என்றும் இந்திய வெளியுறவு செயலரிடம் விளக்கிக்கூறினோம்.
இதேவேளை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் மீளகுடியேற்றப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய எம்மிடம் விரிவாக கேட்டறிந்துகொண்ட வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் , அதற்கு நியாயமான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment