Friday, April 9, 2010


 

உயர் மட்ட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்?
07 April, 2010 by admin
வன்னிப் பகுதியில் இயங்கிவருகின்ற அரச சாரா நிறுவனங்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் நடந்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கியூடெக்-கரித்தாஸ் நிறுவன பிரதிநிதி, வன்னியில் காணாமல் போனவர்கள் மற்றும் வன்னியில் கடைசி நேரச் சண்டையின்போது கைதுசெய்யப்பட்ட புலிகளின் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, தாம் தடுத்து வைத்துள்ள 11,000 புலிகளின் பட்டியலில் எவருடையதேனும் பெயர் தவறும்பட்சத்தில் அந்தப் பிரமுகர் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.கடைசி நேரப் போரில் பல புலி உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்களும் காயங்களுக்கு உள்ளானபோது அவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை ராணுவத்தினர் கொன்றுவிட்டதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ள நிலையில், பசில் இவ்வாறான பதிலை அளித்திருப்பதானது முக்கிய புலி உறுப்பினர்களின் உறவினர்கள், நண்பர்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.மேற்படி 11,000 பேரின் பட்டியலும் ஒரு வலைத்தளத்தில் இருப்பதாக பசில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த வலைத்தளத்தின் பெயரைத் தாம் கேட்கவில்லை என அரச சாரா நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment