விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் கைது: திவயின தகவல்
[ வெள்ளிக்கிழமை, 11 டிசெம்பர் 2009, 04:06.14 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பீரங்கிப் பிரிவு பொறுப்பாளர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ள அகதிகளில் கோபால் என்ற பீரங்கிப் பிரிவு பொறுப்பாளரும் ஊடுருவியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பீரங்கிப் பிரிவின் பொறுப்பாளராக கடயைமாற்றியமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பலை செலுத்திய மாலுமி ஒருவரையும் கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது அரசாங்கத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment