Friday, April 9, 2010

பல்வேறு தேர்தல் வன்முறைகளுடன் சிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது

பல்வேறு தேர்தல் வன்முறைகளுடன் சிறீலங்காவின் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது.
225 உறுப்பினர்களை கொண்ட சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கு மூலமும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்று வாக்களித்துள்ளார்கள்.
இன்நிலையில் பல்வேறுபட்ட தேர்தல் வன்முறைகளுடன் இன்றைய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டுக்குழுவினரின் வன்முறைகளும் அடக்குமுறைகளுக்குள்ளும் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
வடக்கின் யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினரின் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு மத்தியில் மந்தகதியில் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாமல் உரியவாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்துசெல்லப்படாமல் பல்வேறு மேசடிநிறைந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு பல்வேறு கொலை துப்பாக்கிசூட்டு நிகழ்வுகள் வாக்கு மேசாடிகளுடன் சிறீலங்காவின் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது இதன் பெறுபேறுகள் இன்று நள்ளிரவுடன் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment