Saturday, April 10, 2010

மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு இரண்டும் தான் எமது பிரதான குறிக்கோள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்கு – கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாகவே நாம் அதிகம் கவனம் செலுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு – கிழக்கு மக்கள் எமக்கு வாக்களித்தது எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டதனால் தான். தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும், விரைவான மீள்குடியேற்றத்தையும் நாம் வலியுறுத்துவோம்.
சிறீலங்காவில் உள்ள அரசியல் அமைப்பு திட்டம் தொடர்பாக மக்கள் நம்பிக்கை இழந்ததே மிகக்குறைந்தளவு மக்கள் வாக்களிக்க காரணமாகியது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது அரசுக்கோ வாக்களிப்பது ஆக்கபூர்வமானதல்ல என மக்கள் எண்ணுகின்றனர்.
தமிழ் மக்கள் எல்லோர் மீதும் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. நாம் 13 ஆசனங்களை பெற்றுள்ளோம். மேலும் ஒரு தேசியல் பட்டியல் ஆசனத்தை பெறுவோம்.
தேர்தல் ஆணையகம் சீரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலும் மேலும் சில ஆசனங்களை பெற்றிருப்போம். வவுனியாவில் இருந்து 4,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அங்கு அவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment